

நோயாளிகளிடம் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மனம் திறந்து கனிவோடு பேச வேண்டும் என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க பொதுக்குழுவில் சங்கத்தின் இணையதளத்தை(www.tngda.net) தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
சுகாதாரத்துறையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணை யாக, அதைக்காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் புதிய தொழில்நுட்பங்களுடன்கூடிய கருவிகளைக் கொண்டு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவ சேவை கடைகோடி மக்களுக்கும் எளிதில் கிடைக்க வேண்டுமென்பதற்காக கடந்த ஆண்டில் இத்துறைக்கு ரூ. 7005 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு அடுத்த படியாக இந்தத் துறைக்குத்தான் அதிகமான நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.
கார்ப்பரேட் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத் துவனையில் உள்ள அரசு மருத் துவர்கள் குணப்படுத்துகின்றனர்.
முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பயனடைந்துள்ள 7 லட்சம் பேரில் 3.5 லட்சம் பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன் மூலம் ரூ. 524 கோடி ரூபாய் அரசு மருத்துவ மனைக்கு வருமானம் கிடைத் துள்ளது.
அரசு உதவி மருத்துவர்களின் நேர்காணல் நடத்த இரண்டு வாரங் களுக்குள் ஏற்பாடு, ஆண்டுதோறும் முதல்வரால் பாராட்டப்படும் மருத் துவர்களின் எண்ணிக்கை/1 10-ல் இருந்து படிப்படியாக 100 ஆக உயர்த்துதல் போன்ற மருத்துவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வர் மூலம் தீர்க்கப்படும்
மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் யாரேனும் கோபம் அடையலாம். அப்போது, மருத்துவர்கள், மருத் துவ பணியாளர்கள் கூடுதல்நேரம் ஒதுக்கி அவர்களின் மனநிலையை உணர்ந்து அவர்களில் ஒருவராக மாறி மனம்திறந்து பேச வேண்டும். அப்போதுதான் நோயும் குணமடை யும், நல்ல மருத்துவருக்கான நற் பெயரையும் பெற முடியும் என்றார்.
மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ். கீதாலெட்சுமி பேசுகையில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளியை வசதி குறைவு காரணமாக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம் செய் யும்போது அந்த வசதியைக் கொண்டிருக்கும் மருத்துவமனை யைத் தொடர்பு கொண்டு அந்த வசதி இருப்பதை உறுதிசெய்த பின்னர் 108 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வையுங்கள். அநாதையாக விட்டுவிடாதீர்கள்” என்றார்.
சங்கத் தலைவர் கே. செந்தில் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன், சுகாதார இயக்குநர்கள் ஏ. சந்திர நாதன், கே. குழந்தைசாமி, அஜய் கண்ணம்மாள், சங்க மாநிலச் செயலர் பி. பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலர் நவரெத்தினசாமி உள்ளிட்டோர் பேசினர்.