

புறநகர் ரயில் நிலையங்கள் சுவ ரொட்டிகள் ஒட்டப்படும் விளம்பர மையங்களாக மாறியுள்ளன. இவை பெயர் பலகைகள், கால அட்டவணைகள் மீது ஒட்டப்படு வதால் பயணிகள் ரயில் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
திருவள்ளூர்-சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் உள்ள புறநகர் ரயில் நிலையங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ரயில்வே அதிகாரிகளும், தன் னார்வ தொண்டு அமைப்பினரும் ஒருபுறம் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபுறம், பிறந்த நாள் வாழ்த்து முதல் ஈமச் சடங்கு வரையிலான சுவரொட்டிகள் ரயில் நிலையங்களில் ஒட்டப்படுகின்றன.
ரயில் நிலையங்களில் விளம்பர பதாகைகள் வைக்க ரயில்வே நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற்று, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், அண்மைக் காலமாக கட்டுக்கடங்காத வகையில் சுவ ரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
மேலும் ஆபாச படங்களின் சுவரொட்டிகள், அந்தரங்க பிரச்சி னைகளுக்கு சிகிச்சை மூலம் தீர்வு என்ற பெயரிலான சுவரொட்டி கள் பயணிகளை முகம் சுழிக்க வைக்கின்றன.
சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்கவும் தூய்மையாக வைத் திருக்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.