

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மேலும் 3 குழந்தைகள் உயிர் இழந்தன. தொடர்ந்து இரண்டு நாட்களில் 7 குழந்தைகள் இறந்த தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவ மனையில் சுகாதாரத் துறை அமைச் சர் விஜயபாஸ்கர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்ள குழந்தைகள் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 பச்சிளம் குழந்தைகள் நேற்று முன்தினம் காலை 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து இறந்தன. இதையடுத்து, ஆட்சியர் சம்பத் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் வார்டில் 78 குழந் தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு சாலையாம்பாளையத்தை சேர்ந்த காந்த் ரம்யா தம்பதி யரின் ஆண் குழந்தையும், நேற்று விருத்தாசலம் அருகே ஒட்டில்மேடு கிராமத்தைச் சேர்ந்த சிவசக்தி முருகன் விசாலாட்சி தம்பதியின் பெண் குழந்தையும், சங்கராபுரம் அருகே கடம்பூர் கிராமத்தை சேர்ந்த பரத் ரேவதி தம்பதியின் ஆண் குழந்தையும் அடுத்தடுத்து இறந்தன. ஏற்கெனவே, 4 குழந்தைகள் இறந்த நிலையில் மேலும் 3 குழந்தைகள் இறந்ததால் இரண்டு நாளில் குழந்தைகளின் உயிரிழப்பு 7ஆக உயர்ந்தது.
இதையடுத்து, மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று மாலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ஆட்சியர் சம்பத், மக்கள் நல் வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் சீதாலட்சுமி, மருத்துவக் கல்லூரி டீன் உஷா சதாசிவம், கோட்டாட்சியர் அனுசுயாதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் போதுமான அளவுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலி யர்கள் உள்ளனர். எடை குறை பாடு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக இந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் வென்டி லேட்டர் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் 54,539 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் அரசு மருத்துவமனைகளில் 47,572 குழந்தைகள் பிறந்தன. சிக்கலான பிரசவங்களில் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் துரிதமாக செயல்படுமாறு மாவட் டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.