கனரக தொழில்துறை இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு

கனரக தொழில்துறை இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு
Updated on
1 min read

மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சராக பொன்.ராதா கிருஷ்ணன் முறைப்படி பொறுப் பேற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் தமிழகத் தில், பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி தொகுதி) மட்டுமே வெற்றி பெற்றார். அவர் மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லி உத்யோக் பவனில் உள்ள கனரக தொழில்துறை அமைச்சக அலுவ லகத்தில் புதன்கிழமை பொறுப் பேற்றுக் கொண்டார்.

அவருக்கு அதிகாரி கள் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தமி ழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், பொருளாளர் மோகன்ராஜூலு, வானதி சீனி வாசன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பொறுப்பேற்றுக் கொண்ட பின் நிருபர்களிடம் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கி உள்ளார். கனரக தொழில் வளர்ச்சி மிகவும் முக்கியம். தொழில் துறை முன்னேற்றத்தின் மூலம் நாட் டின் முன்னேற்றத்துக்கு உத வும் வகையில் பாடுபடுவேன்.

தமிழகத்தில் திருச்சி பெல் நிறுவனம் பல்வேறு பிரச்சினை களை சந்தித்து வருகிறது. அந்த நிறுவனத்தை முன்னேற்ற திட்ட மிட்டு வருகிறேன்.தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான மீனவர் பிரச்சினை குறித்து டெல்லி வந்திருந்த இலங்கை அதிபர் ராஜ பக்சேவிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இப்பிரச்சி னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகி றேன். இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

மலையாளத்தில் பேச மறுப்பு

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு கேர ளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கள், மலையாள தொலைக்காட்சி சேனல் நிருபர்கள் பலர் வந்தி ருந்தனர். “கேரள மாநிலத்திலி ருந்து யாரும் மத்திய அமைச்சராக நியமிக்கப்படவில்லை. கேரளாவுக்கும் சேர்த்து உங் களைத் தான் அமைச்சராக நினைக் கிறோம். கேரள மக்களுக்காக ஓரிரு வார்த்தைகளை மலை யாளத்தில் பேசுங்கள்” என்று கேட்டனர். ஆனால், பொன்.ராதா கிருஷ்ணன் மலையாளத்தில் பேச மறுத்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in