

சென்னை காவல்துறை கட்டுப் பாட்டு அறை தொலைபேசியை நேற்று இரவு 7 மணி அளவில் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒரு வர் எழும்பூர் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு போனை துண்டித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அங்கு வெடி குண்டு செயலிழப்பு நிபுணர் குழு வினர் மோப்ப நாயுடன் வந்து, பயணிகளின் உடைமைகள் மற் றும் ரயில் நிலையம் முழவதும் சோதனை நடத்தினர். வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. இரவு முழுவதும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது.
போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.