

குறைந்த விலை வீடு, மனைகள் கண்காட்சி கிழக்கு தாம்பரம், சேலையூரில் உள்ள வாசுதேவா திருமண மாளிகையில் இன்றும், நாளையும் (ஏப்ரல் 18, 19) நடைபெறவுள்ளது.
இது குறித்து இக்கண்காட்சியை நடத்தும் பிராம்ப்ட் டிரேட் ஃபேர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குறைந்த விலையிலான வீடுகளுக்கென்றே பிரத்யேகமாக நடத்தப்படும் இக்கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் நடுத்தர பில்டர்கள், ஃபிளாட் புரமோட்டர்கள் பங்கேற்கின்றனர்.
அபார்ட்மென்ட்கள், தனி வீடுகள், வில்லாக்களுடன் கூடிய மனைப்பிரிவுகளும் இதில் இடம்பெறும். இன்றும், நாளையும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை காணலாம்.
எளிய பட்ஜெட்
“மக்களின் எளிய பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் சொத்துகளை வாங்குவதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், வீட்டு மனைகள் போன்றவற்றை ஒரே சமயத்தில் பார்த்து, தேர்வு செய்ய இது அரிய வாய்ப்பாகும்” என்று பிராம்ப்ட் டிரேட் ஃபேர் நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ.உதயகுமார் தெரிவித்தார்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.