

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு ‘அம்பேத்கர் சுடர் விருது’ வழங்கப்படுகிறது என்று அக்கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
2015-ம் ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர் விருது’ உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும், ஆதிவாசி மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும், அருந்ததி ராய்க்கு வழங்கப்படுகிறது. மே மாதத்தில் சென்னையில் நடைபெறவுள்ள விழா வில் அருந்ததி ராய் கலந்துகொண்டு, இந்த விருதை பெறுகிறார்.