

ஜெ.ஜெ.நகரில் செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்த போலீஸார் 10 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை ஜெ.ஜெ.நகர் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தேகப்படும் விதத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் நெற்குன்றத் தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா(24) என்பதும், அவர் செயின் பறிப்பு குற்றவாளி என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீஸார் அவரது வீட்டில் சோதனை செய்தனர்.
இதில் பல்வேறு இடங்களில் அவர் கொள்ளையடித்த 10 பவுன் செயின்கள், ஒரு லேப்-டாப் ஆகியவை கைப்பற்றப் பட்டன.
ஷேக் அப்துல்லாவை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.