

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சமண சமயத்தவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "உலகில் உள்ள எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது, அவைகளுக்கு ஏற்படும் கஷ்டங்களைப் போக்குவதும், எந்த உயிரையும் பலியிடாமல் இருப்பதும், புலால் உண்ணாமை எனும் சீரிய கொள்கையை நமக்கு வகுத்து கொடுத்தவர் மகான் மகாவீர் ஆவார்.
ராஜவம்சத்தில் பிறந்து, ராஜபரிபாலனத்தில் நாட்டம் கொள்ளாமல் துறவறம் மேற்கொண்டவர். மனித இனம் அன்பும், அறனும் கொண்டு வாழ்க்கையில் வன்முறையை அறவே தவிர்த்து விட்டு ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற கோட்பாட்டை உலகிற்கு தந்தவர்.
மகான் மகாவீர் பிறந்த நாளில் (02.04.2015) அவர் போதித்த சமண சமயத்தை கடைபிடிக்கும் ஆன்றோர்களும், சான்றோர்களும், பொதுமக்களும், எல்லா நலன்களும், அனைத்து வளங்களும் பெற்று வாழவேண்டும் என இறைவனை வேண்டி, இந்த மார்க்கத்தை கடைபிடிக்கும் அனைவருக்கும் எனது இதயமார்ந்த வாழ்த்துக்களை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.