

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்த கத்தை அடுத்த வையாவூரில் இயங்கி வரும் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தைக் கண் டித்து, இந்திய வாலிபர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்த ஆடை தயாரிப்பு நிறுவ னத்தில் 1,500-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே, தொழிலாளர்களை முன்னறி விப்பு இன்றி பணியிலிருந்து நீக்குவதாகவும், உள்ளூர் தொழி லாளர்களை கூடுதல் நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, ஆடை தயாரிப்பு நிறுவனத்தைக் கண் டித்து, அந்த நிறுவனத்தின் அலுவலகம் முன் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்க காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் பிரமிளா கூறும்போது, ‘ஓராண் டுக்கும் மேலாக பணியாற்றி வரும் நிலையில், உள்ளூர் தொழிலாளர்களை ஆலை நிர்வாகத்தினர் திடீரென பணி நீக்கம் செய்து வருகின்றனர். மேலும், தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப் படுகிறது. எனவே, பணி நீக்க நட வடிக்கையைக் கண்டித்தும், தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கக் கோரியும், பெண் தொழி லாளர்களுக்கு ஆலையில் உரிய பாதுகாப்பு அம்சங்களை ஏற் படுத்தி தரக் கோரியும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டோம்’ என்றார்.