Published : 21 Apr 2015 09:18 AM
Last Updated : 21 Apr 2015 09:18 AM

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கொலை; 85 ஆயிரம் கொள்ளைகள்: அன்புமணி ராமதாஸ் வேதனை

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கொலைகள், 85 ஆயிரம் கொள்ளைகள், 5 ஆயிரம் பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது வேதனையளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை மருத்துவக்குடியில் படத் திறப்பு விழா ஒன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:

தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை. இதனால் காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை இழந்து வருகிறோம். மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் வீணாகிவிடும். ஏறத்தாழ 5 கோடி பேர் குடிநீருக்கு அவதியுறும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, பிரதமரை சந்தித்து முறை யிட தமிழக அரசு முன்வர வேண் டும்.

சொத்துக் குவிப்பு வழக்கி லிருந்து ஜெயலலிதா விடுதலை யாவார் எனக் கருதி, தமிழகம் முழுவதும் 400 புதிய அரசுப் பேருந்துகளை இயக்காமல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல, சென்னை மெட்ரோ ரயில் பணி முடிந்த நிலையிலும், கடந்த 6 மாதங்களாக முடக்கி வைக்கப் பட்டுள்ளதற்கான காரணம் என்ன? இது வன்மையாகக் கண்டிக் கத்தக்கது.

இந்தியாவிலேயே நிர்வாகத்தில் மோசமான மாநிலமாக இருந்த பிஹாரை தற்போது தமிழகம் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x