

ரயில் பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 4 மாநில எல்லையில் கூடுதல் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட, வேலூரில் நடந்த ரயில்வே போலீஸாரின் ஆலோசனைக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.
ரயில் கொள்ளை சம்பவங் களை தடுக்கும் பணியில் தமிழ் நாடு ரயில்வே போலீஸார் ஈடுபட் டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநில ரயில்வே போலீஸார் இணைந்து செயல்படு வது தொடர்பாக ஆலோசனைக்கு ரயில்வே ஐஜி சீமா அகர்வால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் 4 மாநில ரயில்வே மற்றும் சென்னை, சேலம், திருச்சி, கேரளா, பெங்களூரு, குண்டக்கல் மற்றும் விஜயவாடா மண்டல ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் அதிகாரிகள் கூட்டம், சென்னை மண்டல ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டம் குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஜோலார்பேட்டை-பங்காருபேட்டை, அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை சென்ட்ரல்-கூடூர், கோவை-பாலக்காடு இடையிலான ரயில்களில் இருமாநில போலீஸார் கூடுதலாக கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். ரயில் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த விவரங்களை மாநிலங் களுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்படும்.
ரயில் பயணிகளிடம் நடைபெற்ற குற்றங்கள் குறித்து உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது அவர்கள் குறித்த தகவலை அண்டை மாநிலங் களுக்கு வழங்க வேண்டும்.
மாநிலங்கள் இடையிலான ரயில்வே பாதுகாப்பு ஆலோ சனைக் கூட்டம் தொடர்ந்து நடத்த வேண்டும். அடுத்த கூட்டம் மே கடைசி வாரத்தில் பெங்களூருவில் நடத்தப்படும். ரயில்வே போலீஸ் சைபர் பிரிவு இணைந்து செயல்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது’’ என்றனர்.