

தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், ஒருங்கிணைந்த கிராமத் தொழிலாளர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் உலக “பணி செய்யுமிடத்தில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம்” தின விழா எழும்பூர் இக்சா மையத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் ராமேஸ்வரத்தில் மீன் பிடித்தல் மற்றும் மீன் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ பெண்கள் பற்றி ஒருங்கிணைந்த கிராமத் தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் டி.ஆர்.சந்திரன் நடத்திய ஆய்வறிக்கையை சென்னை சமூகப் பணி கல்லூரி பேராசிரியை சாரா வெளியிட்டார். சமூக வளர்ச்சிப்பணி ஆலோசகர் சிம்ப்சன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் பேசிய பேராசிரியர் சாரா, ‘‘மீனவர்களுக்கு வழங்கும் அரசின் சலுகைகள் மீனவப் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்று ஆய்வறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. இவர்களை மீனவர்களாக அங்கீகரித்து, இவர்களுக்கும் மீனவர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.