

பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்புக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிளஸ் டூ வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதமே வகுப்புகள் தொடங்கிவிடும். சென்னை அடையாரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் 2015-16-ம் ஆண்டுக்கான பள்ளிக் கட்டணத்தின் முதல் தவணையை செலுத்தாத பிளஸ் டூ மாணவர்கள் 3 பேர் வகுப்புக்குள் அனு மதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவர் ஒருவரின் பெற்றோர் கூறும்போது, “பள்ளிக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண் டும் என்ற புதிய முறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதனால், வெளிநாடு களில் இருக்கும் பெற்றோர்கள் சிலர் கட்டணத்தை கடைசி தேதிக்குள் செலுத்த முடியவில்லை. அதனால் அவர்களின் பிள்ளைகள் கடந்த 3 நாட்களாக வகுப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, அவர்களின் கட்டணத்தை மற்ற பெற்றோர்கள் பணமாக செலுத்து வதாக கூறினோம். இதுகுறித்து கேட்டதற்காக பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு 8-ம் தேதி வரை வகுப்புகள் கிடையாது என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் எங்களுடன் பேசி வகுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும்” என்றார்.
2015-16-ம் ஆண்டுக்கான பள்ளிக் கட்டணத்தின் முதல் தவணையை செலுத்தாத பிளஸ் டூ மாணவர்கள் 3 பேர் வகுப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை.