Published : 04 Apr 2015 10:01 AM
Last Updated : 04 Apr 2015 10:01 AM

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தொடக்கம்

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. சங்கத் தலைவராக தா.பாண்டியன், பொதுச் செயலாளராக கருணாநிதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அல்லிக்குளம் வணிக வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் சங்கக் கட்டடத்தை திறந்து வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், சங்கத் தலைவருமான தா.பாண்டியன் பேசியதாவது :

இந்தியாவில் 4 கோடிக் குடும்பங்கள் வீடற்றவர்களாக உள்ளனர். ஆனால் நோக்கியா, போர்ட், தோஷிபா போன்ற கம்பெனிகளுக்கு கேட்டவுடனே 150 ஏக்கர், 200 ஏக்கர் பரப்பில் நிலம் வழங்கப்படுகிறது. சென்னை நகரில் பி அண்ட் சி மில்லுக்கு 112 ஏக்கர் நிலம் உள்ளது இந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூலம் சம்பாதிப்பதை விட, நில விற்பனையின் மூலம் பலமடங்கு அதிகம் சம்பாதிக்கின்றன. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டால் அதை எதிர்த்து நம்மால் செயல்பட முடியாது. எனவே சங்கத்தை பலப்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x