வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு முகாம்: 64,099 வாக்குச்சாவடிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு முகாம்: 64,099 வாக்குச்சாவடிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
Updated on
1 min read

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த முகாமில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

இரட்டை பதிவு, போலி வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஒழிக்க வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் ஆதார் எண் விவரங் களை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற் கான பணிகள் நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் நடந்து வருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவுப்படி வாக்காளர்களின் விவரங்களைக் கொண்ட பிரத்தியேக படிவத்துடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை பெற்றனர்.

மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம், நீக்கம், சேர்த்தல், புகைப்பட மாற்றம் உள்ளிட்டவை இருப்பின் அதற்கான படிவத்தையும் பூர்த்தி செய்து பெற்று, அவற்றை கணினியில் பதிவு செய்தனர். குழப்பம் இருப்பின் அவை தீர்க்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர் வீட்டுக்கு வந்தபோது இல்லாத வாக்காளர்களின் வசதிக் காக ஏப்ரல், மே மாதங்களில் 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமை களில் சிறப்பு முகாம்கள் நடத்தப் படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்திருந்தார். அதன்படி இம்மாதத்துக்கான முதல் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

தமிழகம் முழுவதும்,64,099 வாக்குச்சாவடிகளில் நடந்த இம் முகாமில் சாவடிக்கு இரண்டு மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருந் தன. இணையதள இணைப்பு இருப்பின் உடனடியாகவும் இல்லாவிடில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்திலும் ஆதார் எண்கள் இணைக்கப்பட் டன. இந்த முகாமில் லட்சக்கணக் கானவர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து தேர்தல் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த முகாமில் பங்கேற்காதவர்கள் இம்மாதம் 26-ம் தேதி அல்லது மே 10 மற்றும் 24-ம் தேதிகளில் நடக்கும் முகாம்களில் பங்கேற்கலாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in