Published : 25 Apr 2015 08:48 AM
Last Updated : 25 Apr 2015 08:48 AM

அதிகரிக்கும் கோஷ்டி பூசல்களால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அடுத்தடுத்து தேர்தல்கள்: திருப்பூரில் இன்று மாநிலக்குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கோஷ்டி பூசல்கள் அதிகரித்துவருவதால், மாநிலச் செயலாளர், மத்தியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டது போல, இதர மாநில நிர்வாகிகளை தேர்வு செய்யவும் தேர்தல் நடத்தப்படுவது உறுதி என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கடந்த பிப்ரவரி 25 முதல் 28 வரை கோவையில் நடந்தது. மாநிலச் செயலாளர் பதவிக்கு சி.மகேந்திரன் இரா.முத்தரசன் இடையே கடும் போட்டி ஏற்பட்டதால் மாநாட்டுப் பிரதிநிதிகள் இடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் முத்தரசன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதன் பிறகு, அக்கட்சியின் தேசிய மாநாடு மார்ச் 24 முதல் 29 வரை புதுச்சேரியில் நடந்தது. தமிழகத்தில் இருந்து கட்சியின் மத்திய குழுவுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் மகேந்திரன் முத்தரசன் அணியினர் இடையே அங்கும் போட்டி ஏற்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகம் சார்பில் தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் வாக்களித்து மத்திய குழுவுக்கான 10 பேரையும் தேர்வு செய்தனர் என கூறப்பட்டது.

கூட்டம் இன்று தொடக்கம்

இந்த சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் வரும் இன்றும் நாளையும் (25, 26 தேதிகள்) திருப் பூரில் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில் துணைச் செயலாளர்கள், பொரு ளாளர், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கள் உள்ளிட்ட பொறுப்பு களுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

காவல் நிலையங்களில் புகார், நீதிமன்றங்களில் வழக்கு என பல நெருக்கடிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது எதிர்கொண்டு வருகிறது. கட்சிக்குள் வெளிப்படையாக வலுத்துவரும் கோஷ்டி பூசல்களே இதற்கு காரணம். திருப்பூரில் நடக்கும் மாநிலக் குழு கூட்டத்திலும் நிர்வாகிகள் தேர்வு சுமுகமாக நடக்க வாய்ப்பு இல்லை. மாநிலச் செயலாளர், மத்திய குழு உறுப்பினர்கள் தேர்வுக்கு நடந்ததுபோல இன்னொரு தேர்தல் நடப்பது உறுதி என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலிடத்தில் ஆலோசனை

திருப்பூர் மாநிலக் குழுக் கூட்டம் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறும்போது, ‘‘மாநில மாநாட்டில் புதிய மாநிலச் செயலாளர், புதிய மாநிலக் குழு தேர்வு நடைபெற்றன. அதன் பிறகு முதல் மாநிலக் குழு கூட்டம் திருப்பூரில் நடக்கிறது. மாநில துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை இக்கூட்டத்திலேயே தேர்வு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, துணைப் பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோருடன் ஆலோசித்து முடிவு செய்வோம்’’ என்றார்.

காவல் நிலையங்களில் புகார், நீதிமன்றங்களில் வழக்கு என பல நெருக்கடிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது எதிர்கொண்டு வருகிறது. கட்சிக்குள் வெளிப்படையாக வலுத்துவரும் கோஷ்டி பூசல்களே இதற்கு காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x