

வடசென்னை அனல் மின் நிலைய புகைப்போக்கியில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டுவில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான வடசென்னை அனல் மின்நிலையம் இயங்கி வருகிறது. இரு நிலைகள் கொண்ட இந்த மின் நிலையத்தின் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில், தலா 210 மெகாவாட் என, 630 மெகாவாட் மின்சாரமும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில், தலா 600 மெகாவாட் என, 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இச்சூழலில், நேற்று காலை அனல் மின் நிலை யத்தின் முதல் நிலையின் 3-வது அலகின் புகைப்போக்கியில், புகையை வெளியேற்றப் பயன் படும் விசிறியில் அதிர்வு ஏற் பட்டது. இதையடுத்து, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது புகைப்போக்கியில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள் ளனர்.
அப்பணி முடிந்த பிறகே மின் உற்பத்தி தொடங்கும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.