Published : 12 Apr 2015 11:24 AM
Last Updated : 12 Apr 2015 11:24 AM

கூட்டணிக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பிளவுபடுத்த முக்கிய அரசியல் கட்சி சதி: தா.பாண்டியன் குற்றச்சாட்டு

கூட்டணிக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பிளவுபடுத்த தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி சதி செய்வதாக அக்கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறிய தாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் 122 பேர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 பேர் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மாநிலக் குழுவில் இல்லாதவர்கள் உள்கட்சி விவகாரங்கள் குறித்து வழக்கு தொடரலாமா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோர்தான் மாநிலச் செயலாளர் தேர்தலை நடத்தி, வாக்குகளை எண்ணி, முடிவுகளை அறிவித்தனர். இந்த முடிவை எதிர்த்து யாரும் கட்சியின் மேலிடத்தில் புகார் தெரிவிக்காத நிலையில், உள்கட்சி விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று உள்ளனர்.

மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாள், சென்னை உள்ளிட்ட இடங்களில் வேறு ஒருவர் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. எதையோ எதிர்பார்த்து காத் திருந்தவர்கள், தங்கள் நோக்கம் நிறைவேறவில்லை என்றவுடன் இதுபோன்ற செயலில் இறங்கியுள்ளனர்.

இப்போதுள்ள தலைமை இருந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தங்கள் அணிக்குள் கொண்டுவர முடியாது என்பதால் கட்சியைப் பிளவுபடுத்தும் சதியில் முக்கிய அரசியல் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு எங்கள் கட்சியில் உள்ள சிலர் பலியாகியுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட் சியை சீர்குலைக்க வேண்டும், சிறுமைப்படுத்த வேண்டும், விரைவில் நடைபெறவுள்ள மாநிலக் குழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க வேண் டும் என்பதற்காக பொய்க் குற்றச் சாட்டுகளைக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம். எங்களது தரப்பு நியாயங்களை நிரூபித்த பிறகு கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழலில் கட்சிக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்க உறுப்பினர்கள் உறுதியாக, ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x