

சென்னை மேடவாக்கம் - பள்ளிக் கரணை சந்திப்பில் நேற்று முன் தினம் மாலை போலீஸார் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது சந்தேகப்படும் விதமாக பையுடன் வந்து கொண்டிருந்த நபரை பிடித்து சோதனையிட்டனர்.
விசாரணையில் அவர் பள்ளிக் கரணையை சேர்ந்த பால முருகன்(36) என்பது தெரிந்தது. 5 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பாலமுருகன் அந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வரவழைத்து விற்பனை செய்து வந்துள்ளார். போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.