

சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (திங்கள் கிழமை) புறப்படும் கிராண்ட் டிரங்க், தமிழ்நாடு விரைவு ரயில்கள் மற்றும் இன்று மாலை புறப்படும் ஜெய்ப்பூர் வரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்ட்ரலில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்படும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 1.30 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இரவு 10 மணிக்கு புறப்படும் தமிழ்நாடு விரைவு ரயில் நள்ளிரவு 2 மணிக்கு டெல்லிக்கு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட இருந்த ஜெய்ப்பூர் விரைவு ரயில் நாளை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இணை ரயில் தாமதம் காரணமாக 3 ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.