

நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற சென்னை டாக்டர்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 5 ஆயிரத் துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுற்றுலா வந்த வெளிநாட்டினரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் நேபாளம் முழுவதும் தகவல் தொடர்பும் சாலை போக்கு வரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் ஆங்காங்கே சிக்கியுள் ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர் களை மீட்கும் பணியில் தமிழக அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தைச் சேர்ந்த 400 பேர் அங்கு சிக்கியுள்ளதாகவும், அவர் களில் 350-க்கும் அதிகமானோர் பாது காப்பாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மீதமுள்ளவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியில் அதி காரிகள் ஈடுபட்டுள்ளனர்’’ என்றனர்.
தமிழகத்தில் இருந்து பெரும் பாலும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலமே நேபாளத்துக்கு செல்கின்றனர். நிலநடுக்கத்துக்கு முன்பே அங்கிருந்து திரும்பிய பலர், வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் முழு விவரங்களை சேகரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர் களுக்கு உதவுவதற்காக டெல்லி தமிழ்நாடு இல்லத்திலும் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலும் கட்டுப் பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 00977-9818968752, 9818968780, 9851107021, 9851135141, 12081148, 12081141 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பிரியா ராஜன், ஜெய நரசிம்மன், வாணி, ஜோதிசங்கர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 10 பேர், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றபோது நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத் துள்ளது.
இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட அப்போலோ மருத்துவமனை டாக்டர் ஒருவரின் குடும்பத்தினர் எனக்கு தகவல் அளித்தனர். அவர்களின் விவரங்களை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அனுப்பினேன். தற்போது அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். டாக்டர்கள் என்பதால் நிலநடுக்கத்தால் காய மடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் அவர்கள் சென்னை திரும்புவர்’’ என்றார்.