சொத்துக்காக அடுத்தடுத்து கொலைகள்: தடுக்க தவறிய போலீஸ் - முன்பே எச்சரித்த ‘தி இந்து’

சொத்துக்காக அடுத்தடுத்து கொலைகள்: தடுக்க தவறிய போலீஸ் - முன்பே எச்சரித்த ‘தி இந்து’
Updated on
2 min read

காரைக்காலில் பிரபல சாராய வியா பாரியாக இருந்த ராமு (எ) ராதாகிருஷ்ணனின் முதல் மனைவி வினோதா (38) நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்தபோது சீர்காழியில் வழிமறித்து, கொடூர மாக வெட்டிக் கொலை செய்யப் பட்டார்.

சாராய வியாபாரி ராமு சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைக் கையகப்படுத்து வதில் ராமுவின் முதல் மனைவி வினோதா, இரண்டாவது மனைவி எழிலரசி ஆகிய இருவருக்கிடையே ஏற்பட்ட போட்டா போட்டியில், எழிலரசிதான் கூலிப்படை வைத்து வினோதாவைப் படுகொலை செய் ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.300 கோடி சொத்து

சாராய வியாபாரி ராமுவின் அசுர வளர்ச்சியால் அவருக்கு காரைக்கால் மற்றும் தமிழகத்தில் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு சொத்துகள் குவிந்தன. சொத்து தந்த சுகத்தில் முதல் மனைவியை விட்டு எழிலரசியிடம் திரும்பிய ராமு, ஒரு கட்டத்தில் சுமார் ரூ.100 கோடிக்கும் மேலான சொத்துகளை எழிலரசிக்கு அளித்தார். இந்நிலை யில் எழிலரசியோடு சென்று கொண்டிருந்தபோது ராமுவை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து கொலை செய்தனர். அதில் எழிலர சிக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

‘‘ராமுவை எழிலரசி பிடியிலி ருந்து மீட்க முயன்று தோற்றார் வினோதா. இனியும் பொறுத் தால் மற்ற சொத்துகளும் எழிலர சிக்குப் போய்விடும் என்று நினைத் தார். அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூலிப்படை யினரை ஏவி தன் கணவர் ராமுவை கொலை செய்தார் வினோதா. அந்த வழக்கில் வினோதா மற்றும் அவருக்கு உதவிய ஐயப் பன், கோவிந்தராசு, ஆனந்த் உள் ளிட்டோர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தனர்”என்று கூறும் போலீஸார், கணவரை தன் கண்முன்னே கொன்றவர்களை பழிதீர்க்க முடிவு செய்து எழிலரசிதான் தற்போது முதல் மனைவி வினோதாவை கொலை செய்திருப்பதாக வழக்குப் பதிவு செய்து எழிலரசியையும் இன்னும் சிலரையும் கைது செய்துள்ளனர்.

பழிக்குப் பழி

எழிலரசியின் கொலை திட்டங் கள் தற்போது தீட்டப்பட்டதல்ல. 2013 ஜனவரியில் ராமு கொலை செய்யப்பட்டதுமே அதற்கு காரண மானவர்களை பழிவாங்க எழில ரசி முடிவு செய்திருப்பார் என்று காரைக்கால் போலீஸார் தெரிவிக் கின்றனர். ராமு கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ஐயப்பனை அதே ஆண்டு ஜூலை மாதம் ஒரு கும்பல் கொலை செய்தது. மற்றொருவரான கோவிந்தராசுவை கொலை செய்ய அவரது வீட்டுக்கு அருகே சென்ற கூலிப்படையினரை போலீஸார் ரோந்து வந்தபோது கண்டுபிடித்து கைது செய்தனர். கணவன் ராமுவை கொன்ற வர்களை முழுவதுமாக ஒழித்துக் கட்ட முடிவெடுத்துத்தான் அடுத்த தாக தற்போது வினோதாவை கொலை செய்திருக்கிறார் எழிலரசி என்று போலீஸார் கூறுகின்றனர்.

கடைசி நாளில்..

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதை நன்கு உணர்ந்துதான் சிங்கப்பூர் செல்ல முடிவெடுத்திருந்தார் வினோதா. கொலையான அன்று இரவு சிங்கப்பூர் செல்வதற்காக காரைக்காலிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அவரைத் தப்பவிடக் கூடாது என்றுதான் அவசரமாக முடிவெடுத்து வழியிலேயே காரை மடக்கி அவரைக் கொலை செய் துள்ளனர் என்றும் போலீஸ் தரப் பில் கூறப்படுகிறது.

தன் கணவர் ராமு கொல்லப்பட் டதற்கு பழிக்குப் பழியாக தன்னை யும் கொல்வதற்கு எதிர்தரப்பு முயற்சிப்பதை அறிந்த வினோதா, முந்திக்கொண்டு எழிலரசியைக் கொல்ல முயற்சித்தாரா என்று கடந்த ஆண்டு மே மாதம் 14-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் பெயர்கள் குறிப்பிடாமல் சந்தே கம் எழுப்பப்பட்டது. சிதம்பரம் அண் ணாமலை நகரில் திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர், வெடிகுண்டு தயாரித்தபோது அது வெடித்து பலத்த காயமடைந்தார். அதுகுறித்த செய்தியில் அந்த பிரபல ரவுடி வெடிகுண்டு செய்தது ராமுவின் சொத்துகளுக்கு உரிமை கொண்டாடும் உறவுப் பெண் மணி ஒருவரைக் கொலை செய் வதற்காக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

7 பேருக்கு வலைவீச்சு

வினோதாவைக் கொலை செய்ய 2 கார்களில் வந்தவர்கள் மொத்தம் 11 பேர். அதில் எழிலரசி உட்பட 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் மற்ற 7 பேர் கொள்ளிடம் ரயில் நிலையத் தில் காரை நிறுத்திவிட்டு, அந்த சமயத்தில் ரயில் இல்லாத தால் இருப்புப்பாதை வழியா கவே சிதம்பரம் நோக்கி ஓடிச் சென்றதாக போலீஸாரின் விசார ணையின் போது ரயில் நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கூலிப் படைக்குத் தலைவனாக இருந்தது யார் என்பதையும் போலீஸார் கண்ட றிந்தால் மேலும் பல மர்மங்கள் வெளிப்படும் என்றும் நம்பப்படு கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in