நடிகை அல்போன்ஸாவின் பிடியில் இருந்து என் கணவரை மீட்டுத் தாருங்கள்: காவல் ஆணையரிடம் இளம்பெண் புகார்

நடிகை அல்போன்ஸாவின் பிடியில் இருந்து என் கணவரை மீட்டுத் தாருங்கள்: காவல் ஆணையரிடம் இளம்பெண் புகார்
Updated on
1 min read

‘நடிகை அல்போன்ஸாவிடம் சிக்கியிருக்கும் எனது கணவரை மீட்டுத் தாருங்கள்’ என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த சுமித்ரா (33), என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று முன்தினம் மாலை ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஜெய்சங்கரை 8 ஆண்டு களாக காதலித்தேன். நாங்கள் இருவரும் 2013-ம் ஆண்டு மருத மலை முருகன் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். திருமண வரவேற்பில் ஜெய்சங்க ரின் தோழி என்ற முறையில் நடிகை அல்போன்ஸா கலந்துகொண்டார். தொழில் விஷயமாக எனது கணவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வார். கடந்தமுறை குவைத் சென்றவர், பின்னர் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. கணவரின் பெற்றோர், உறவினர்கள் என பலரிடம் விசாரித்தும் அவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அவரது பேஸ்புக் பக்கத்தில், நடிகை அல்போன்ஸா வுடன் சேர்ந்து இருக்கும் ஏராளமான புகைப்படங்கள் இருப்பதைப் பார்த்தேன். ஒரு படத்தில் எனது கணவர் மருத்துவமனையில் இருப்பதுபோல தெரிகிறது. இது குறித்து அல்போன்ஸாவிடம் போனில் தொடர்புகொண்டு கேட்ட போது, எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர், எனது கண வரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். இதனால், என் கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட லாம். அல்போன்ஸாவிடம் இருந்து எனது கணவரை மீட்டுத் தாருங்கள்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள் ளது. புகார் குறித்து சைதாப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in