

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, சுவாமி சந்நிதி அருகில் பூக்களால் ஆன பெரிய பந்தல் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. அர்ச்சகர் கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் சந்நிதி அருகே உள்ள தங்கக் கொடிமரத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, பகல் 12 மணியளவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
சித்திரை திருவிழாவை முன் னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம்வர உள்ளனர்.
கள்ளழகர் உற்சவம்
ஏப். 28-ம் தேதி பட்டாபிஷேகம், ஏப். 30-ம் தேதி திருக்கல்யாணம், மே 1-ம் தேதி தேரோட்டம் நடை பெறவுள்ளன. மே 4-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங் கும் உற்சவம் நடைபெறவுள்ளது.
கொடியேற்ற விழாவில், மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்களும் திரண்டிருந்தனர்.