காவிரி பிரச்சினையில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? - பி.ஆர்.பாண்டியன் கேள்வி

காவிரி பிரச்சினையில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? - பி.ஆர்.பாண்டியன் கேள்வி
Updated on
1 min read

காவிரி பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் பிரதமர் 45 நிமிடங்கள் ஆலோ சனை நடத்தியுள்ளார். அது குறித்து பேட்டியளித்துள்ள தமிழிசை, தண்ணீர் தேவைக் காக அண்டை மாநிலங்களுடன் தமிழகம் முட்டிமோத வேண்டியதில்லை என்றும், தமிழகத் தில் ஓடக்கூடிய நதிகளை இணைத்தால் பிரச்சினை தீரும் என்றும் அதற்கான திட்டங்களை பிரதமர் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நதிகள் இணைப்புத் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், இதை வைத்து விவசாயிகளின் உணர்வை திசைதிருப்ப பாஜக முயற்சிப்பதாகத் தெரிகிறது. எனவே, காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்து தமிழிசை விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in