Published : 24 Apr 2015 11:31 AM
Last Updated : 24 Apr 2015 11:31 AM

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மே 11 முதல் விண்ணப்பம்: பொறியியல் படிப்புக்கு மே 6 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக் கான விண்ணப்பம் விநியோகம் மே 11-ம் தேதி அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் வழங்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி கூறியுள்ளார்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் மே 7-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து, மே 11-ம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும்

தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி (டிஎம்இ) கூறிய தாவது:

தமிழகத்தில் 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கான விண் ணப்பம் வரும் மே மாதம் 11-ம் தேதி முதல் விநியோகம் செய்யப் பட உள்ளது. இதற்காக 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப் பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அதிகமாக தேவைப்படும் இடங் களுக்கு மேலும் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படும். விண்ணப்பத்தின் விலை ரூ.500 ஆகும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு இலவச மாக விண்ணப்பங்கள் வழங்கப் படும்.

மே 28 வரை

எம்பிபிஎஸ் விண்ணப்பங்கள் மே 28-ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மே 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் எம்பிபிஎஸ் மருத்துவ தேர்வு குழுவின் செயலருக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட மருத்துவ கல்லூரிகளிலேயே வழங்கப் படும்.

www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். மருத்துவப் படிப் புக்கான தர வரிசைப் பட்டியல் ஜூன் 12-ம் தேதி வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா பல்கலை. அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் மே 6-ம் தேதி முதல் 27-ம் தேதி வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை மே 29-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 29-ம் தேதி வரையிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழு வதும் 60 மையங்களில் கிடைக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது

விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. பொறியியல் விண் ணப்பம் தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிவிப்பு நாளிதழ்களில் மே 4-ம் தேதி அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x