Published : 30 Apr 2015 07:27 AM
Last Updated : 30 Apr 2015 07:27 AM

அகதிகளை பிரான்ஸ் அனுப்ப போலி பாஸ்போர்ட்: இலங்கை தமிழர்கள் 4 பேர் சிக்கினர்

அகதிகளை பிரான்ஸ் அனுப்ப போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை தமிழர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது ஏராளமானவர் கள் அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனர். இவர்களின் உறவினர் கள் பலர் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வசிக்கின்றனர். எனவே தமிழகத் தில் இருப்பவர்களும் அங்கு சென்றால் கொஞ்சம் வசதியாக வாழலாம் என்று நினைக்கின்றனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தனமாக படகிலும், மற்ற நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்திலும் செல்கின்றனர். இப்படி வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கவும் சிலர் உள்ளனர்.

இலங்கையை சேர்ந்த சிலர் சென்னையில் தங்கி போலி பாஸ் போர்ட் தயார் செய்து கொடுப்ப தாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அம்பத் தூரில் ஒரு வீட்டில் வசித்த இலங்கை தமிழர்கள் ஜெய ரூபன், பாலச்சந்தர், இந்திரன் ஆகியோரை போலீஸார் ரகசிய மாக கண்காணித்தனர். 3 பேரும் நேற்று முன்தினம் காலை யில் மதுரவாயல் கிருஷ்ணாநகரில் உள்ள பாலன் என்ற இலங்கை தமிழரின் வீட்டுக்கு வந்தனர். இதை நோட்டமிட்ட க்யூ பிரிவு போலீஸார் துப்பாக்கி முனையில் அந்த வீட்டை சுற்றி வளைத்து, 4 பேரையும் கைது செய்தனர்.

அம்பத்தூர் மற்றும் மதுர வாயல் வீட்டை சோதனை செய்த போது 15 பேருக்கு போலி பாஸ் போர்ட் தயாரித்து வைத்திருந்தது தெரிந்தது. தமிழகத்தில் அகதி களாக இருக்கும் 15 பேரையும் நேபாளம் நாட்டுக்கு முதலில் அழைத்துச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் பிரான்ஸ் அனுப்ப திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ஜெயரூபன், பாலச்சந்தர், இந்திரன், பாலன் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீ ஸார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர். இவர்கள் இதேபோல போலி பாஸ்போர்ட் மூலம் வேறு யாரையாவது வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x