சிறு தானிய உணவு தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சிறு தானிய உணவு தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

எம்ஸ்எம்இ சார்பில் தினை லட்டு, தினை இனிப்பு பணியாரம், தினை தோசை மிக்ஸ், வரகு புளியோதரை, வரகு பிரியாணி, உள்ளிட்ட பல்வேறு சிறு தானிய உணவு வகைகளை தயாரிக்கும் பயிற்சி ஏப்ரல் 20 முதல் 24-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

பிரட், பஃப்ஸ், கேக், பன், ரஸ்க் போன்ற பேக்கரி பொருட்களை தயாரிக்கும் பயிற்சியும் ஏப்ரல் 20 முதல் 24-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் சேர விரும்பு வோர், எம்எஸ்எம்இ வளர்ச்சி நிலையம், கிண்டி, சென்னை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9940318891, 9790754446 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in