

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கழிப்பறையில் இருந்த 1 கிலோ 600 கிராம் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று சென்னை விமான நிலையத் துக்கு நேற்று முன்தினம் மாலை வந் தது. இந்த விமானம் மீண்டும் மும் பைக்கு செல்ல வேண்டும் என்பதால், சிங்கப்பூர் பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமானத்தின் கழிப்பறைக்குள் ஒரு பை இருந்தது. பையில் வெடிகுண்டுகள் ஏதாவது இருக்குமா என்று அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டருடன் வந்து பையை சோதனை செய்தனர். வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று உறுதிச் செய்த பிறகு, பையை திறந்துப் பார்த்தனர். அதில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தது யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.