Published : 30 Apr 2015 10:29 am

Updated : 30 Apr 2015 10:29 am

 

Published : 30 Apr 2015 10:29 AM
Last Updated : 30 Apr 2015 10:29 AM

அரசு செலவில் ஜப்பான் செல்லும் மதுரை பள்ளி மாணவர்: ஆட்டோ டியூப்பில் அறிவியல் சாதனம் படைத்ததால் கவுரவம்

பழைய ஆட்டோ டியூப்பில் உருப்படியான அறிவியல் சாதனத்தைக் கண்டுபிடித்த மாணவர், அரசு செலவில் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழும் ஜப் பான், மற்ற ஆசிய நாடுகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க வைக்கும் விதமாக ஜப்பான் - ஆசிய இளையோர் அறிவியல் பரிமாற்றத் திட்டத்தை (சுகுரா) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இந்தியா, சீனா, கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 15 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ஜப்பானில் உள்ள தொழிற்சாலை கள், அறிவியல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் கல்வி நிலை யங்களுக்கு அழைத்துச் செல்லப் படுவர். இந்த ஆண்டு, இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் மதுரை மாவட்டம், அலங் காநல்லூர் அருகே உள்ள அய்யூ ரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கும் ஒருவர். இவரது தந்தை அம்சத் இபுராகீம் ஆட்டோ ஓட்டுநர்.

தற்போது 11-ம் வகுப்பு முடித் துள்ள சித்திக்கிடம், இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து கேட்டோம்.

“எங்கள் ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்தபோதே, அறிவி யல் பாடத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதை ஆசிரியை செல்வராணி உணர்ந்தார். எனவே, என்னை அறிவியல் கண்காட்சி களில் பங்கேற்க வைத்தார். மத் திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் ‘இன்ஸ்பேர்’ விருதுக்கான போட்டி 2009-ம் ஆண்டு மாவட்ட அளவில் நடை பெற்றது. அதில், நான் உருவாக் கிய எளிய முறையில் எடை அறியும் கருவியை பார்வைக்கு வைத்திருந்தேன். பயன்படாத பழைய ஆட்டோ டியூப், குளுக் கோஸ் டியூப் மற்றும் நீளத்தை அளக்கும் இஞ்ச் டேப் ஆகிய வற்றை பயன்படுத்தி அதைச் செய்திருந்தேன். அது மாவட்ட அளவில் முதல் பரிசை வென்றது.

2010-ம் ஆண்டு மாநில அளவி லான போட்டியிலும் முதலிடம் பிடித்தேன். இடையிடையே எனது கண்டுபிடிப்பை மேம்படுத்திக் கொண்டே வந்ததால், 2011-ல் தேசிய அளவிலான போட்டியிலும் முதல் பரிசு கிடைத்தது. 2013-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் விருந்தில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பை அறிவியல் தொழில்நுட்பத்துறை வழங்கியது.

அதைத் தொடர்ந்து, ஜப்பான் செல்லும் 50 பேர் குழுவிலும் என்னைத் தேர்வு செய்துள்ளனர். இதில் நான், திருப்பூர் மாவட் டத்தைச் சேர்ந்த விக்னேஷ், யுகவேந்தன் ஆகிய 3 பேரும் தமிழர் கள். நான் படித்த அரசு பள்ளியும், ஆசிரியை செல்வராணி, தலைமை ஆசிரியர் அருள்முருகன் ஆகி யோர் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணம்.

தற்போது நான் படிக்கும் மதுரை பிரிட்டோ பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றிருக்க முடியாது.

வருகிற மே 7-ம் தேதி டெல்லியில் இருந்து ஜப்பான் செல்லவுள்ளோம். அங்குள்ள விண்வெளி ஆய்வு மையம், அறி வியல் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவதோடு, நோபல் விஞ்ஞானிகளையும் சந்திக் கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எதிர்காலத்தில் விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்கு இந்தப் பயணம் உதவும் என்று நினைக்கிறேன்.’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வசதி இல்லாத குடும்பம் என்பதால், அபுபக்கர் சித்திக் இந்த கோடை விடுமுறையில் தனது அண்ணன்கள் சையது அபுதாகீர், சையது அலாவுதீன் ஆகியோருடன் எலெக்ட்ரிக் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் சாதனம்மாணவர்ஜப்பான்அறிவியல் தொழில்நுட்பம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x