Published : 12 May 2014 10:02 AM
Last Updated : 12 May 2014 10:02 AM

காவல்துறையில் நேரடி உதவியாளர் பணி வயது வரம்பு கட்டுப்பாடு; புதிய நிபந்தனை - இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு பாதிப்பு

காவல்துறையில் நேரடி உதவி யாளர் பதவிக்கு அனைத்து வகுப் பினருக்கும் வயது வரம்பு கட்டுப் பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற புதிய நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

சிறை, காவல், வனம், போக்கு வரத்து, நெடுஞ்சாலை, வணிகவரி கள், இந்து சமய அறநிலைய ஆட்சி, பதிவுத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் நேரடி உதவி யாளர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2ஏ தேர்வு (நேர்காணல் அல்லாத பணிகள்) நடத்தப்படுகிறது..

இந்தத் தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, ஏதே னும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரி வினருக்கு (ஓ.சி.) வயது வரம்பு 30 ஆகும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி வகுப்பினருக்கும், ஓ.சி. உள்பட அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு ஏதும் இல்லாமல் இருந்தது.

காவல்துறைக்கு வயது வரம்பு

இந்நிலையில், காவல்துறை உதவியாளர் பதவிக்கு மட்டும் அரசு புதிதாக வயது வரம்பு கட்டுப்பாட்டு கொண்டுவந்துள்ளது. அதன்படி, அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன் காவல் துறையில் நேரடியாக உதவியாளர் பணிக்கு நியமிக்கப்படுவோர், குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற புதிய நிபந்தனை யும் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் எழுத்துப்பூர் வமாக உறுதிமொழியும் அளிக்க வேண்டும்.

ஒருவேளை இடையில் பணியில் இருந்து விலகினால் பயிற்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் படிகளை அரசிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மாநில பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் கொண்ட பதவிகளுக்காக நடத்தப்படும் குருப்-2 தேர்விலும், நேர்முகத் தேர்வு இல்லாத உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2ஏ தேர்விலும் இதுவரை இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எந்தப் பதவிக்கும் வயது வரம்பு கட்டுப்பாட்டு கிடையாது.

தற்போது, முதல்முறையாக காவல்துறை உதவியாளர் பதவிக்கு வயது வரம்பு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. எனவே, 30 வயதை கடந்தவர்கள் இத்துறையில் உதவியாளர் பதவியில் சேர முடியாது. வயது வரம்பு காரணமாக, இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த பட்டதாரிகள் காவல்துறையில் நேரடியாக உதவியாளர் பணியில் சேருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x