கிரானைட் குவாரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள்: சகாயத்திடம் வனத்துறை அறிக்கை தாக்கல்

கிரானைட் குவாரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள்: சகாயத்திடம் வனத்துறை அறிக்கை தாக்கல்
Updated on
1 min read

கிரானைட் குவாரிகளால் வனத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சட்ட ஆணையர் சகாயத்திடம் மதுரை மாவட்ட வன அலுவலர் அறிக்கை அளித்தார்.

மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரையில் 12-ம் கட்ட விசாரணை நடத்தி வருகிறார். இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். சட்டவிரோதமாக நடைபெற்ற குவாரிகளால் துறை வாரியாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சகாயம் அறிக்கை கேட்டிருந்தார்.

பொதுப் பணித் துறை, வேளாண்மை, வருவாய், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை யினரும் அறிக்கை அளித்தனர். கிரானைட் குவாரி களால் வனத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சகாயத் திடம் மதுரை மாவட்ட வன அலுவலர் நிகர் ரஞ்சன் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையை சகாயம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிகளால் ஒட்டுமொத்தமாக வனத்துறைக்கு ஏற்பட்ட இழப்புகள், இதனால் காடுகள் அழிப்பு, விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட பலதரப்பிலும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சகாயம் கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி மாவட்ட வன அலுவலர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சகாயம் கேட்டிருந்த விவரங் களை அறிக்கையாக அளித்தோம். வனத் துறைக்கு ஏற்பட்ட இழப்புகள், மலைகள் அழிக்கப்பட்டதால் மலைப் பாம்புகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்துவிடுகிறது. இதுபோன்ற இயற்கை மாற்றங்கள் குறித்து விரிவான அறிக்கையை சகாயம் கேட்டுள்ளார். வரும் ஏப். 28-ம் தேதி முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in