Published : 27 Apr 2015 08:41 AM
Last Updated : 27 Apr 2015 08:41 AM

சூளகிரி அருகே கோர விபத்து: லாரி மீது பார்சல் வேன் மோதியதில் ஓட்டுநர் உட்பட 3 பேர் பலி

சூளகிரி அருகே கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி மீது பார்சல் வேன் மோதியதில் ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை மதுரவாயல் பகுதி யில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில், ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா (60), இவரது மனைவி பார்வதம்மாள் (50) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இதே நிறுவனத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜண்ணா (55), அவரது உதவியாளராக ஜலபதி ஆகியோரும் பணியாற்றினர். இவர் கள் அனைவரும் உறவினர்கள்.

நேற்று முன்தினம் சென்னை யிலிருந்து பார்சல்கள் ஏற்றிய வேனை பெங்களூரு நோக்கி ராஜண்ணா ஓட்டிச் சென்றார். வேனில் கிருஷ்ணப்பா, பார்வ தம்மாள், ஜலபதி ஆகியோரும் இருந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் சென்றபோது, சூளகிரி அருகே கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி மீது வேன் மோதியது.

இந்த விபத்தில் பார்சல் வேன் ஓட்டுநர் ராஜண்ணா, ஜல பதி ஆகியோர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கிருஷ்ணப்பா, பார் வதம்மாள் ஆகியோரை அங்கி ருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வழியி லேயே கிருஷ்ணப்பா உயிரிழந் தார். பார்வதம்மாள் மேல் சிகிச் சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து சூளகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி மேலாளர்கள் 2 பேர் பலி

தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது கார் மோதியதில் மதுரையை சேர்ந்த வங்கி மேலாளர்கள் இருவர் உயிரி ழந்தனர்.

மதுரை இந்திராணி நகரை சேர்ந்தவர் ரவி (35). அங்குள்ள கோட்டக் மகேந்திரா வங்கி கிளை யில் மேலாளராக பணியாற்றி வந் தார். இவரது நண்பர் மதுரை டோக் நகரை சேர்ந்த ராஜா பிரபு (34). இவர் மதுரையில் உள்ள ஆக் ஸிஸ் வங்கி கிளையில் மேலாள ராக பணியாற்றி வந்தார்.

இவர்கள் மற்றும் மற்றொரு நண்பரான மதுரை செக்கானியா புரம் நாகுநகரை சேர்ந்த விஜய ராம் (34) ஆகியோர், ராஜா பிரபு வுக்கு சொந்தமான காரில் நேற்றுமுன்தினம் திருச்செந்தூர் சென்றனர். சாமி தரிசனம் செய்த பின்னர் நேற்றுமுன்தினம் இரவு காரில் ஊருக்கு திரும்பினர். காரை ரவி ஓட்டினார்.

தூத்துக்குடி துறைமுக புறவழிச் சாலையில் மீன்வளக் கல்லூரி அருகே இரவு 11.30 மணியளவில் வந்தபோது, முன்னால் சென்ற ஒரு லாரி திடீரென திரும்பியதால், அதன் மீது மோதாமல் இருக்க காரை ரவி வேகமாக திருப்பியுள்ளார்.

அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரி மீது கார் மோதியது. இதில் ரவி, ராஜா பிரபு உயிரிழந்தனர். விஜயராம் காயமின்றி தப்பினார். தூத்துக்குடி சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x