சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி டிக்கெட் விற்பனை

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி டிக்கெட் விற்பனை
Updated on
1 min read

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத் துக்கு வெளியே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான போலி டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியைக் காணவந்த ரசிகர்கள் மாலை 6 மணி முதலே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் கொண்டுவந்த டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து பரிசோதித்த பிறகே அவர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்படி சோதனை செய்தபோது 10 போலி டிக்கெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டன.

அவற்றைக் கொண்டுவந்த ரசிகர் களிடம் விசாரித்தபோது மைதானத் துக்கு வெளியே 2 பேர் அந்த டிக்கெட்டுகளை விற்பனை செய்த தாக கூறினர். இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற் குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அசல் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சேப்பாக்கம் கிரிக் கெட் மைதானத்தின் தகவல் தொடர்பு மேலாளர் பாபா கூறும் போது, “சேப்பாக்கம் மைதானத்தில் நேரடியாகவும், அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. ரசிகர்கள் வேறு யாரிட மும் ஏமாற வேண்டாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in