

சின்னத்திரை இயக்குநர் பாலாஜி யாதவ் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் பாலாஜி யாதவ் (45). சின்னத்திரை இயக்குநரான இவர், ‘சிவசக்தி’, ‘அரசி’, ‘பயணம்’, ‘சிம்ரன் திரை’, ‘துளசி’ உள்ளிட்ட பல டிவி தொடர்களை இயக்கியுள்ளார்.
தொலைக்காட்சிகளில் டப்பிங் சீரியல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கடந்த ஒரு ஆண்டாக வாய்ப்பு இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற பாலாஜி யாதவ் அடுத்த நாள் காலையில் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது பாலாஜி யாதவ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதுபற்றி அவரது உறவினர்கள் போலீஸா ருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் அவரது உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத் தனர். இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட பாலாஜி யாதவுக்கு கிருஷ்ண வேணி என்ற மனைவியும், அக்ஷரா என்ற மகளும் உள்ளனர். பாலாஜி யாதவின் இறுதிச் சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரான திருச்சியில் நடக்கிறது.