

புதுச்சேரி மாநில அரசின் முக்கிய விருந்தினர் பட்டியலில் புகழ்பெற்ற முக்கிய பிரமுகர் களை இடம்பெற செய்து அவர் கள் புதுச்சேரி வரும்போது கவுர விக்கும் வழக்கம் நடை முறையில் உள்ளது. புதுச் சேரி மாநில அரசின் விருந் தினர் பட்டியலில் காஞ்சி சங்கராச்சாரியர்களான ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரது பெயர்கள் 2004-ம் ஆண்டு வரை இடம் பெற்று இருந்தன.
இந்நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருந்ததால் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இருந்து இருவரது பெயர்களும் நீக்கப்பட்டு அரசு மரியாதை தருவது நிறுத்தப் பட்டது.
இந்நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடு தலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் புதுச்சேரி அரசின் இந்து அறநிலையத்துறை மீண்டும் காஞ்சி சங்கராச்சாரி யார்களை புதுச்சேரி அரசின் விருந்தினர்களாக சேர்த்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு விஜயேந்திரர் புதுச்சேரிக்கு வந்தார்.அப்போது புதுச்சேரி எல்லைப் பகுதியான கனக செட்டிக்குளத்தில் சட்டப் பேரவைத் தலைவர் சபாபதி, செய்தித்துறை இயக்குநர் உதய குமார், இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் ஆகியோர் வரவேற்றனர்.
நேற்று மாலை ஜெயேந்திரர் விமானம் மூலம் புதுச்சேரி வந்தார். லாஸ்பேட்டை விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
புதுச்சேரியில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் பங்கேற்க இருவரும் வந்திருந்தது குறிப் பிடத்தக்கது.