Published : 06 Apr 2015 11:44 AM
Last Updated : 06 Apr 2015 11:44 AM

வேளாங்கண்ணியில் ஈஸ்டர் கொண்டாட்டம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டா டப்பட்டது. இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஈஸ்டர் பண்டிகையை கொண் டாட வேளாங்கண்ணி பேராலயத் தில் நேற்று முன்தினம் இரவு 10.15 மணிக்கு பேராலய அதிபர் மைக்கேல் அடிகளாரின் முன்னிலையில் இயேசு உயிர்ப்பு பெருவிழா தொடங்கியது.

முதலில் புதிய நெருப்பு, புதிய தண்ணீர் ஆகியவை மந்திரிக்கப் பட்டது. பின்னர் வார்த்தை வழிபாடு நடைபெற்றது. பைபிளில் இருந்து ஏழு வாசகங்கள் ஓதப்பட்டன.

இரவு 12 மணிக்கு கலையரங் கத்தின் மேலிருந்து பாறைகள் விலகி, ஒளிவெள்ளத்தில் இயேசு உயிர்த்தெழுந்த காட்சி நடை பெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், துணை அடிகளார் சூசைமாணிக்கம், உதவிப் பங்குத் தந்தை ஆரோக்கியசுந்தரம், பொரு ளாளர் தார்ச்சிஸ்ராஜ் ஆகியோர் நற்கருணை வழிபாட்டை நடத்தி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இயேசுபிரான் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் விதமாக வாண வேடிக்கை நடைபெற்றது.

நேற்று காலை முதல் மதியம் வரை பேராலயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி களில் சிறப்பு திருப்பலிகள் நடை பெற்றன. இவற்றில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இரவு 8 மணியளவில் உயிர்த் தெழுந்த இயேசுபிரான் சொரூபம் தாங்கிய தேர் பேராலயத்திலிருந்து புறப்பட்டு, ஆரியநாட்டுத் தெரு, கடைத் தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x