Published : 04 Apr 2015 09:14 AM
Last Updated : 04 Apr 2015 09:14 AM

காலக்கெடு நேற்றுடன் முடிந்தது: கேரளத்துக்கு லாரி போக்குவரத்து நிறுத்தம்

வாளையாறு சோதனைச் சாவடியில் ஏற்பட்டு வரும் காலதாமதப் பிரச்சினைக்கு லாரி உரிமையாளர் சங்கங்கள் விதித்திருந்த காலக் கெடு முடிந்ததைத் தொடர்ந்து, கேரளத்துக்கான அனைத்து சோதனைச் சாவடிகள் வழியாகவும் லாரிகள் இயக்கப்படுவது நேற்று பகல் 2 மணி முதல் நிறுத்தப்பட்டுள் ளது.

தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் குறைவான கவுன்ட்டர் கள் மட்டுமே இருப்பதால் அந்த சோதனைச் சாவடியை கடந்து செல்ல சரக்கு வாகனங்களுக்கு பல மணி நேரம் காலதாமதம் ஏற்படுகிறது. மூன்று கவுன்ட்டர்கள் மட்டுமே உள்ள இந்த சோதனைச் சாவடியில் 10 கவுன்ட்டர்கள் வரை அமைக்க வேண்டும். சோதனைச் சாவடியில் பணியாற்றும் ஊழியர் களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். லாரி ஓட்டுநர்களுக்கு கழிப்பிடம், தங்கும் விடுதி உள் ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கேரள அரசிடம் கோரிக்கை வைத்து லாரி உரிமையாளர் சங்கங்கள், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தைத் தொடங்கியுள்ளன.

வேலைநிறுத்தம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. வாளையாறு சோதனைச் சாவடியில் ஏற்பட்டு வரும் காலதாமதப் பிரச்சினைக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை கேரள அரசு எடுக்காவிட்டால், அந்த மாநிலத்துக்கான 18 சோதனைச் சாவடிகள் வழியாக லாரிகளை இயக்கமாட்டோம் என லாரி உரிமை யாளர் சங்கங்கள் அறிவித்திருந்தன. அந்த காலக்கெடு நேற்று பகல் 2 மணியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து சோதனைச் சாவடிகள் வழியாக வும் லாரிகள் இயக்கம் நிறுத்தப் பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா, கோவை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் கே.ஆர். ஆறுமுகம் ஆகியோர் நேற்று கூறியதாவது:

நாங்கள் கொடுத்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரையிலும் பேச்சுவார்த்தைக்கு கேரள மாநில அரசு அழைக்கவில்லை. இதை யடுத்து போராட்டத்தை தீவிரமாக் கியுள்ளோம். வாளையாறு சோத னைச் சாவடி மட்டுமல்லாது மொத்த முள்ள 18 சோதனைச் சாவடிகள் வழியாகவும் லாரிகளின் இயக் கத்தை வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் நிறுத்தியுள்ளோம். எங்களது நியாயமான போராட் டத்துக்கு லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x