Published : 16 Apr 2015 10:32 AM
Last Updated : 16 Apr 2015 10:32 AM

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அபராதம்

தொழிலதிபர் விஜய் மல்லையா வுக்குச் சொந்தமான கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

பயணியிடம் உயர் வகுப்பு விமான பயணத்துக்கான கட்ட ணத்தை வசூலித்துவிட்டு, குறைந்த கட்டண விமானத்தில் பயணம் செய்ய வைத்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய நுகர்வோர் நல நிதியத் தில் ரூ. 25 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என ஆணையம் தீர்ப் பளித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜே.கே. மித்தல் மற்றும் ஒரு தன்னார்வ தொண்டாளர் ஒருவர் 2008-ம் ஆண்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில் தங்களிடம் உயர் ரக விமான பய ணத்துக்கான கட்டணம் வசூலிக்கப் பட்டது. ஆனால் இந்நிறுவனம் கையகப்படுத்திய குறைந்த கட் டண விமானமான டெக்கான் விமா னத்தில் பயணம் செய்யவைக்கப் பட்டோம் என குறிப்பிட்டிருந்தனர்.

இதுபோல இந்நிறுவனம் எத் தனை டிக்கெட்டுகளை விற்பனை செய்திருந்தது என்ற விவரம் தெரியவில்லை என்றும் இது தொடர்பாக எவ்வளவு தொகையை இந்நிறுவனம் வசூலித்தது என்றும் தெரியவில்லை என்றும். இது போன்ற நடைமுறையை பிற நிறுவனங்கள் பின்பற்றக்கூடாது என்று ஆணையம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இணையதளம் மூலம் டிக்கெட்டு களை பதிவு செய்யும் பயணிகள் மற்றும் ஏஜென்டுகள் மூலம் பதிவு செய்வோர் தங்களுக்கு உயர் ரக விமானபயணம் கிடைக்கும் என நம்பிக்கையோடு பதிவு செய்கின்ற னர்.

நிறுவனம் வழங்கிய டிக்கெட்டு கள் அத்தகைய தவறான அபிப் பிராயத்தை தோற்றுவித்துள்ளன. ஆனால் டிக்கெட்டுகளில் பெரும்பாலும் தவறான தகவல்களே அளிக்கப்பட்டுள்ளன. என்று தங்களது புகார் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்

வழக்கறிஞர் மித்தல் டெல்லியிலிருந்து புவனேஸ்வரம் செல்ல விமான நிலையம் சென்றபோது தங்கள் நிறுவனம் அப்பிரிவில் விமானத்தை இயக்கவில்லை என்று கூறி குறைந்த கட்டண விமானத்தில் அவரை பயணிக்க செய்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கிங்ஃபிஷர் நிறுவனம் தெரிவித்த விளக்கங் களை ஆணையம் ஏற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x