Published : 28 Apr 2015 08:35 AM
Last Updated : 28 Apr 2015 08:35 AM

விலைமதிப்புள்ள பழம்பெரும் கார்களுடன் கோவையில் ஜி.டி. கார் அருங்காட்சியகம் தொடக்கம்

கோவையில் ஜி.டி. நாயுடு அறக் கட்டளை சார்பில், விலை மதிப்புள்ள பழம்பெரும் கார் களுக்கான அருங்காட்சியகம் நேற்று தொடங்கப்பட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, இங்கி லாந்து, ஜப்பான், ஸ்பெயின் போன்ற பல்வேறு நாடுகளில் 1886-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட பென்ஸ் மோட்டார் வேகான் கார் முதல் நவீன கால ஸ்போர்ட்ஸ் கார் என மிகப்பெரிய மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மொத்தம் 70 கார்களுடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒவ்வொரு காரும் ஜி.டி.நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரால் வாங்கப்பட்ட வை. 8 பழமையான கார்கள் மட்டும் அதனை பயன்படுத்திய நபர்களிடம் இருந்து அருங்காட்சியகத்துக்காக பெறப்பட்டு காட்சிப்படுத்தப்பட் டுள்ளன.

விலை மதிப்பிட முடியாத இந்த கார்கள், கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி. நாயுடு அருங்காட்சியகத்தில், பழமையான கார்களுக்கு என பிரத்தியேகமாக இடம் ஒதுக்கி பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

"இந்த அருங்காட்சியகம் 2 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. அந்த கால தொழில்நுட்பத்தின் மதிப்பை வெளிப்படுத்துவதற்காக அருங் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில பழமைவாய்ந்த கார்களைப் பெற்று அருங்காட்சி யகத்தை விரிவுபடுத்த திட்டமிடப் பட்டுள்ளது” என்று ஜி.டி.நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர் ஜி.டி.கோபால் தெரிவித்தார்.

ஜி.டி.நாயுடு அருங்காட்சியக வளாகத்தில் நேற்று நடை பெற்ற விழாவில், சிறப்பு விருந்தி னர்களாகக் கலந்து கொண்ட இந்தூர் மகாராஜா வம்சத்தைச் சேர்ந்த மன்வீந்தர சிங், பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், செலரிஸ் டெக்னாலஜி நிறுவ னத்தின் தலைவர் வி.சுமந் திரன் ஆகியோர் கார் அருங்காட்சி யகத்தை தொடங்கி வைத்தனர்.

பி.கே.கிருஷ்ணராஜ் வான வராயர் பேசும்போது, ‘இந்த அருங்காட்சியகம் கோவைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவம். இது, கார்களை காட்சிப்படுத் துவதற்கான அருங்காட்சியகம் மட்டுமல்ல, போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆவணம்’ என்றார்.

சுமந்திரன் பேசியதாவது:

ஆட்டோமொபைல் தொழி லுக்கும் கோவைக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. எவ்வித பெரிய அளவிலான கவனமும் கிடைக்காமல் ஜி.டி.நாயுடு என்ற தனிப்பெரும் மனிதரால் ஏற்பட்டதுதான் இந்த தொழில் வளர்ச்சி. டாடா நானோ காருக்கான இன்ஜின் கோவையில் இருந்து தான் வடிவமைக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்திராத ஒன்று. அந்த அளவுக்கு ஆட்டோ மொபைல் தொழிலுக்கு கோவை யின் பங்களிப்பு உள்ளது.

`இந்தியாவில் உருவாக்கு வோம்’ என்ற திட்டத்தில் அதிகப்படி யான வளர்ச்சியை சந்திக்க இருப்பது ஆட்டோமொபைல் தொழில்தான். நவீன கார்கள் உருவாக்கப்பட்டு வரும் அதே வேளையில் சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டு மாசு ஏற்படுத் தாத கார்களும் வர உள்ளன. அந்த தொழில்நுட்பத்துக்கு ஏற்றாற்போல் இந்த துறையில் உள்ள இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜி.டி.நாயுடு அறக்கட்டளை நிர்வாகிகள் ஜி.டி.ராஜ்குமார், அகிலா சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x