Published : 12 May 2014 09:42 AM
Last Updated : 12 May 2014 09:42 AM

வட்டி வாங்குபவர்கள் உண்மையான முஸ்லிம் அல்ல: தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் விளக்கம்

‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ என்ற பெயரில், முஸ்லிம் அல்லாதவர் களுக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி, சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூக ஆண் களும், பெண்களும் பங்கேற்றனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம்:

குர் ஆனில் இந்து, கிறிஸ்தவ மதம் குறித்த கருத்துகள் உள்ளனவா?

இந்துக்கள் என்று குறிப்பிடப்பட வில்லை, ஆனால், சிலை வழிபாடு கொண்டவர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. இயேசு இறைவனின் தூதர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி வாங்கக் கூடாது என்று இஸ்லாம் மதத்தில் சொல்லப்பட் டாலும், பல இஸ்லாமியர்கள் வட்டி வாங்குகிறார்களே?

வட்டி வாங்கும் முஸ்லிம்கள் பெயரளவிலேயே முஸ்லிமாக வெளியே தெரிவார்கள். அவர்கள் இஸ்லாமிய கொள்கைப்படி இறைவனுக்கு அஞ்சி நடப்பவரோ, இஸ்லாமியரோ அல்ல.பல மதத்தவர் வசிக்கும் இந்தியா போன்ற நாடுகள் அமைதியாகவே உள்ளன. ஆனால், முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கும் ஈரான், ஈராக், லிபியா, எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் அதிக அளவில் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் ஈராக்கில் 25 ஆயிரம் பேர் குண்டு வெடிப்புக்கு பலியாகியுள்ளனர். இதற்கு என்ன காரணம்?

இஸ்லாமிய நாடுகள், குறிப்பாக வளைகுடா நாடுகளில் அதிக அளவு பெட்ரோலிய வளம் உள்ளது. உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் இந்த வளத்தைக் கைப்பற்ற பல வல்லரசு நாடுகள் போட்டி போடுகின்றன. அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் வசம் இந்த நாடுகளை வைத்துக் கொள்ள ஆக்கிரமிப்பு வேலைகளை நடத்துகின்றன. எனவேதான் அந்த நாட்டின் இளைஞர்கள், தங்கள் நாட்டை அமெரிக்கா ஆக்கிரமிப்பதா என்று கோபத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் இஸ்லாமிய மதத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. இந்தியாவில் அதுபோன்ற ஆக்கிரமிப்புகள் இல்லை. முன்பு ஆங்கிலேயர் ஆக்கிரமித்தபோது, சுபாஷ் சந்திரபோஸ், வாஞ்சி நாதன், பகத்சிங் போன்ற தியாகி கள் இப்படித்தான் ஆக்கிரமிப்பாளர் களை எதிர்த்தனர். அதேநேரம் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலானோர் இஸ்லாமிய கொள்கைகளை முறையாக பின்பற்றவில்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு ஜைனுல் ஆபிதீன் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x