Published : 15 May 2014 11:31 AM
Last Updated : 15 May 2014 11:31 AM

அமிலம் குடித்த சிறுவனுக்கு 6 ஆண்டுகளில் 13 அறுவை சிகிச்சைகள்: அரசு பொதுமருத்துவமனை டாக்டர்கள் குணப்படுத்தினர்

குளுகோஸ் என்று நினைத்து வீட்டில் இருந்த அமிலத்தை குடித் ததால் அவதிப்பட்ட சிறுவனை 13 அறுவைச் சிகிச்சைகளுக்கு பிறகு குணப்படுத்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை யில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினர். இவர்களின் கடைசி மகன் பிரேம் (12). 2008-ம் ஆண்டு மே மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது குளூகோஸ் என்று நினைத்து கழிவறையை சுத்தம் செய்யும் அமிலத்தை எடுத்து குடித்துவிட்டான். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு சாப்பிட முடியாமலும், பேச முடியா மலும், சுவாசிக்க முடியாமலும் அவதிப்பட்டான். அவனது எடை 22 கிலோவில் இருந்து 10 கிலோவாகக் குறைந்தது.

அமில பாதிப்பு

இதையடுத்து 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழும்பூர் குழந்தை கள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் பிரேமின் உணவுக் குழாய் மற்றும் இரைப்பை பாதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக உணவு செலுத்துவதற்காக சிறு குடலுக்குள் சிறுகுழாய் பொருத் தும் அறுவைச் சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர். அதன்பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

13 அறுவை சிகிச்சைகள்

முதல் கட்டமாக சிறுவனின் பாதிக் கப்பட்ட உணவுக்குழாய்க்கு பதிலாக பெருங்குடலை உணவுக் குழாயாக அறுவைச் சிகிச்சை மூலம் மாற்றினர். இதையடுத்து மற்றொரு அறுவைச் சிகிச்சை மூலம் பெருங்குடலை கழுத்து பகுதியுடன் இணைத்தனர். மேலும் சுவாசிப்பதற்காக கழுத்து பகுதியில் சிறிய துளையிட்டு ஒரு டியூபை மூச்சுக்குழாயுடன் இணைத்தனர். இது போல சிறுவன் பிரேமுக்கு கடந்த 6 ஆண்டுகளில் 13 அறுவைச் சிகிச் சைகள் செய்யப்பட்டன. தீவிர சிகிச்சைக்கு பிறகு சிறுவன் பிரேம் தற்போது பூரணமாக குண மடைந்து, இன்னும் இரண்டு நாட் களில் வீட்டுக்கு திரும்பவுள்ளான்.

10 கிலோ அதிகரிப்பு:

இதுதொடர்பாக மருத்துவமனை டீன் விமலா, துணை மருத்துவக் கண்காணிப்பாளர்கள் நாராயண சாமி, ரகுநந்தன், ஆர்எம்ஓ ஆனந்த் பிரதாப் மற்றும் துறை தலைவர் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் ஆகியோர் கூறியதாவது:

சிறுவனுக்கு 6 ஆண்டுகளில் மொத்தம் 13 அறுவைச் சிகிச்சை கள் செய்யப்பட்டுள்ளன. கழுத் துப் பகுதியில் இணைக்கப்பட்ட பெருங்குடல் அடிக்கடி சுருங்கி கொண்டே இருந்தது. அதனால், அந்த பகுதியில் 15 முறை விரிவுப் படுத்தும் சிகிச்சையும் செய்யப் பட்டது. சிறுவனின் எடை தற்போது 10 கிலோ அதிகரித்துள்ளது. இந்த அறுவைச் சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால், பல லட்சங்கள் செலவாகி இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறுவன் பிரேம் கூறுகையில், “அமிலத்தை குடித்ததால் நான் மிகவும் சிரமப்பட்டேன். நான் ஏதாவது சாப்பிட்டால் மூக்கு வழி யாக வந்துவிடும் நிலையில் இருந் தேன். இப்போது நன்றாக சாப்பிடு கிறேன். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை பார்த்து எனக்கும் டாக்டராகும் ஆசை வந்துள்ளது. நான் ஒரு டாக்டராகி மற்றவர் களுக்கு சேவை செய்வேன்” என்றான். தன் மகனைக் காப்பாற்றிய டாக்டர்களுக்கு சிறுவன் பிரேமின் தாய் சரிதா கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

அமிலத்தை குடித்துவிட்டால்...

அமிலத்தை யாராவது குடித்துவிட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆசிட் குடித்தவரை வாந்தி எடுக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். அப்படிச் செய்தால் ஆசிட் வெளியே வரும் போது, இரண்டாவது முறையாக மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x