

இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெற இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நடத்த இருந்த ஸ்டிரைக் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனையாளர்களுக்கு விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களும் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி நேரம் மட்டுமே இயங்கும். மாலை 6 மணிக்குப் பிறகு ஸ்டிரைக் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டிரைக் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கத் தலைவர் முரளி அறிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், ''பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
மோடி வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். அமைச்சர் உறுதிமொழியை ஏற்று ஸ்டிரைக் ஒத்திவைக்கப்பட்டுள்ளது'' என்று முரளி கூறினார்.