Published : 23 Apr 2015 09:00 AM
Last Updated : 23 Apr 2015 09:00 AM

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வந்தது: 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதற்கான இடத்தை தேர்வுசெய்ய, மத்திய அரசின் 5 பேர் கொண்ட குழுவினர் 4 நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்துக்கு நேற்று வந்தனர்.

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ் - AIMS) அமைக்க வேண்டும் என அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந் தார். தமிழக அரசின் கோரிக் கையை ஏற்ற மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடியில் 200 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க திட்டமிட்டது.

இதையடுத்து எய்ம்ஸ் மருத் துவமனையை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து அனுப்பும்படி மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக் கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரம், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்து அனுப் பப்பட்டது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இடத்தை தேர்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு தமிழகத் துக்கு நேற்று அனுப்பியது. மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் தாய்த்ரிபாண்டா தலைமையில், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் ஜெ.பாலசந்தர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை கட்டிடக்கலை வல்லுநர் சச்சின் மகேந்துரு, மத்திய அரசின் சார்பு செயலாளர் எல். சந்திரசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கோயம்புத்தூருக்கு நேற்று வந்தனர்.

இந்த குழுவினர் முதலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்ற னர். அதன்பின் தோப்பூர், புதுக்கோட்டை நகரம், செங்கிப்பட்டி ஆகிய இடங்களிலும் வரும் 24-ம் தேதி வரை பார்வையிடுகின்றனர்.

இதையடுத்து வரும் 25-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளனர். தமிழக சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், குழுவினருடன் ஒருங்கிணைப்பாளராக செல்கிறார். சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன் வரும் 25 ம் தேதி குழுவினரை சந்தித்து தமிழக அரசின் விளக்கங்களை எடுத்துக் கூற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x