லிம்ரா நிறுவனம் சார்பில் மருத்துவக் கல்வி திறனறி தேர்வுக்கு அனுமதி இலவசம்

லிம்ரா நிறுவனம் சார்பில் மருத்துவக் கல்வி திறனறி தேர்வுக்கு அனுமதி இலவசம்
Updated on
1 min read

பிளஸ் டூ மாணவர்களுக்காக அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு இணையான மருத்துவக் கல்வி திறனறி தேர்வை லிம்ரா நிறுவனம் மே 3-ம் தேதி நடத்தவுள்ளது.

சென்னையில் உள்ள லிம்ரா ஓவர்சீஸ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம், வெளிநாட்டில் உயர்கல்வி பயில்வதற்கு 12 ஆண்டுகளுக்கு மேலாக வழிகாட்டி வருகிறது. இந்நிறுவனம் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக ‘மருத்துவக் கல்வி திறனறிதல் தேர்வு’ நடத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள், தனியார் மருத்துவ பல்கலைக் கழகங்களின் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு இணையாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு பிளஸ் டூ மாணவர்களுக்கு மட்டும் மே 3-ம் தேதி பிற்பகல் 2.30-க்கு சென்னை யில் 6 மையங்களிலும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், காரைக் குடி, நாகர்கோவில், கும்பகோணம், புதுச்சேரி யில் தலா ஒரு மையத்திலும் இத்தேர்வு நடத்தப் படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழக தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க இது உதவியாக இருக்கும்.

இதுபற்றி பாரத் பல்கலைக்கழகத் துணைவேந் தர் மு.பொன்னவைக்கோ கூறும்போது, ‘‘லிம்ரா மருத்துவக் கல்வி திறனறி தேர்வை பரிந்துரை செய்து ஏற்பு அளிக்கிறேன். இத்தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு லிம்ரா இயக்குநரும், துணைவேந்தராகிய நானும் இணைந்து கையெழுத்திட்டு சான்றிதழ் வழங்குவோம்’’ என்று கூறியுள்ளார்.

இதில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. இலவசமாகவே இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வுக்கு www.limratalenttest.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது 9445483333 என்ற எண்ணுக்கு தங்களுடைய முகவரியை எஸ்எம்எஸ் செய்து விண்ணப்பங்களை பெறலாம். மேலும் விவரங்களை ‘லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ், 177, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, எஸ்எம்எஸ் சென்டர் முதல் தளம், மயிலாப்பூர், சென்னை’ என்ற முகவரியிலோ, 9444614353, 9444615363, 9445783333 ஆகிய செல்போன் எண்களிலோ பெறலாம் என்று லிம்ரா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in