

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற அரசு தொழில்நுட்பத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் ஏப்ரல் 27 முதல் 29-ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்படும்.
இதுதொடர்பாக அரசுத்தேர்வு கள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசுத் தேர்வுகள் துறையால் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட ஓவியம், இந்திய இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேல்நிலை, கீழ்நிலை சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஏப்ரல் 27 முதல் முதல் 29-ம் தேதி வரை விநியோகிக்கப்படும். தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகத்துக்கு நேரில் சென்று சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், தோல்வியுற்றவர்களுக்குக் குறிப்பாணையும் வழங்கப்படும். சான்றிதழ்கள் இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது.
இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.