திருப்பதி துப்பாக்கிச் சூடு: காவல் நிலையம் முற்றுகை

திருப்பதி துப்பாக்கிச் சூடு: காவல் நிலையம் முற்றுகை
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, அர்ஜுனாபுரம் கிராமத்தில் நேற்று காலை மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும், கண்ணமங்கலம் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.

இதற்கிடையே, செம்மரம் வெட்டுவதற்கு தொழிலாளர்களை அனுப்பிவைக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “செம்மரம் வெட்டுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று சிறப்புப் பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது என்று எச்சரித்தும் செல்கின்றனர்.

மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர் கூட்டங்கள் நடத்தப்படும். செம்மரம் வெட்டுவதற்காக தொழிலாளர்களை அனுப்பிவைக்கும் இடைத்தரகர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் ஆட்சியர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in