Published : 28 Apr 2015 09:39 AM
Last Updated : 28 Apr 2015 09:39 AM

பூசாரிகள் நலவாரியம் செயலிழந்துள்ளது: வேதாந்தம் குற்றச்சாட்டு

கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம் செயலிழந்துள்ளதாக தமிழ்நாடு கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை யின் மாநில பொதுக்குழுக் கூட்டத் துக்குப் பின் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமக் கோயில் பூசாரிகள் உள்ளனர். இவர்கள் தவிர பூ கட்டுவோர் 25 லட்சம் பேர் மற்றும் கோயில் களில் அருள்வாக்குச் சொல்வோர் 5 லட்சம் பேர் உள்ளனர். ஆனால், கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியத் தில் இதுவரை 80 ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட் டுள்ளனர்.

அவ்வாறு சேர்க்கப்பட்டவர் களுக்கும் இதுவரை முறையான ஓய்வூதியம் கிடைக்கவில்லை. எனவே நலவாரியத்தை செயல்படுத்தி, ஓய்வூதியத்தை உறுப்பினர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், மற்றவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துபவர்களுக்கே இனி வாக்களிப்பதென முடிவு செய்துள் ளோம். மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பெண்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய மாநாட்டை நடத்தவுள் ளோம்.

முன்னதாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாதயாத்திரை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x