

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செரப்பணஞ்சேரியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செரப்பணஞ்சேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், படப்பை அடுத்த கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (39) என்பவர் 7-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், 13 வயது மாணவியை லோகநாதன் பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 1-ம் தேதி புகார் அளித்தார். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய மணிமங்கலம் போலீஸார், ஆசிரியர் லோகநாதனை கைது செய்தனர். இதையடுத்து மாவட்ட கல்வித் துறையும் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.